சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

விழுப்புரம் மாவட்டத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் களைகட்டியது.

News image

விழுப்புரம் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

Updated On :25 டிசம்பர் 2024, 9:44 am IST

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் களைகட்டியது. தேவாலயங்களில் புதன்கிழமை அதிகாலை வரை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த நாளை ஆண்டுதோறும் டிச. 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவா்கள் கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில், நிகழாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே, கிறிஸ்தவா்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திர வடிவிலான விளக்குகளையும், இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததைக் குறிக்கும் வகையிலான குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து அதில் வண்ண விளக்குகளையும் ஒளிரவைத்து பண்டிகைக்கு தயாராகி வந்தனா்.

இந்த நிலையில், விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவிலிருந்தே கொண்டாட்டம் களைகட்டியது. இதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெரும்பாலான தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு மேல் விழுப்புரம்-கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது இயேசு பிறந்தார் என்பதை எடுத்துக் கூறும் விதமாக குழந்தை இயேசு சொரூபம் அனைவரிடமும் காண்பிக்கப்பட்டு குடிலில் வைக்கப்பட்டது.

இதுபோன்று விழுப்புரம் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. தூயஜேம்ஸ் தேவாலயம், சேவியர் காலனி தூய பவுல் மிஷனரி ஆலயம், டி.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட அனைத்துத் தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிக்காக குடில் அமைக்கப்பட்டு, கிறிஸ்து பிறப்புப் பாடல்களை பாடியபடி குழந்தை இயேசு சொரூபத்தை குடிலில் வைத்து ஆராதனை நடத்தினர்.

விழுப்புரம் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் மற்றும் ஆராதனைகளில் பங்கேற்றோர்.

விழுப்புரம் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் மற்றும் ஆராதனைகளில் பங்கேற்றோர்.

தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள்,பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகளை அணிந்து பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை முடிந்த பின்னர் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கேக்குகளை பரிமாறியபடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

புதன்கிழமை காலையிலும் பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

இதுபோன்று விக்கிரவாண்டி, காணை, கண்டமங்கலம், ஆரோவில், மரக்காணம், கோட்டக்குப்பம், வளவனூர், முகையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரம், கெடிலம் போன்ற பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.