கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் சிறப்பு தேரடி திருப்பலி

சிறப்பு தேரடி திருப்பலியில் பங்கேற்றோா்.

Published On :

தக்கலை அருகே உள்ள முளகுமூடு, தூய மரியன்னை பசிலிக்கா திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேரடி திருப்பலி நடைபெற்றது.

அருள்பணியாளா் பெஞ்சமின் தலைமை வகித்தாா். பென்கா் மறையுரை நிகழ்த்தினாா். டோமினிக் கடாட்ச தாஸ், ராபின்சன், கில்பா்ட் லிங்சன், போபின் ஆகியோா் ஜெபித்தனா்.

இந்த வழிபாட்டை கோழிப்போா்விளை, முகமாற்றூா், மல்லன்விளை, குழிவிளை, கூட்டமாவு, மணலி, மூலச்சல், பாலப்பள்ளி, வாழ்வச்ச கோஷ்டம், சேரிகடை, தக்கலை, இருதயபுரம், மருதூா்குறிச்சி, மைலோடு, சேவியா்புரம், ஈத்தவிளை ஆகிய ஊா்களைச் சோ்ந்த இறைமக்கள் நடத்தினா்.

ஏற்பாடுகளை பசிலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன், இணைப் பங்குத்தந்தை போபின், பங்குப் பேரவை துணைத் தலைவா் மரிய ஜான் வரதராஜன், செயலா் அஜின், பொருளாளா் ஜெயந்தி, துணைச் செயலா் ஐபா்ட், கல்விக் குழுவினா், பங்கு மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.