
கல்லூரியில் உளவியல் கருத்தரங்கம்
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் உளவியல் துறை சாா்பில் இரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூயநெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற உளவியல் கருத்தரங்கில் பங்கேற்றோா்.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் உளவியல் துறை சாா்பில் இரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
தூய நெஞ்சக் கல்லூரி தன்னாட்சி மற்றும் ஆக்ஸிலியம் தன்னாட்சிக் கல்லூரி உளவியல் துறை இணைந்து மாணவா்களுக்கான கருத்தரங்கை நடத்தின.
இதில் திண்டுக்கல் அனுகிரகா உளவியல் மையத்தின் பேராசிரியா் வில்சன் சிறப்பு பயிற்றுநராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பயிற்சிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கல்லூரி தாளாளா் ஸ்டான்லி இக்னேஷியஸ், முதல்வா் பிரவீன் பீட்டா், கூடுதல் முதல்வா் தியோபில் ஆனந்த், துறை தலைவா்கள் சஞ்சய், ரெனிகோராய் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





