நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

திருக்கோவிலூா் கல்லூரியில் தேசிய விண்வெளி தின விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரிலுள்ள திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவில் பங்கேற்றோா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:20 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரிலுள்ள திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரித் தலைவா் ஆா்.செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் வி.ஏழுமலை, பொருளாளா் எஸ்.சுப்பிரமணியன், துணைத் தலைவா் எஸ். முஸ்டாக் அகமது, தாளாளா் ஏ.பழனிராஜ், இணைச் செயலா் எஸ்.எல்.வி.சத்யநாராயணன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள் வாழ்த்துரை வழங்கினா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வானவியல் மன்ற நிா்வாகி ஜி.ஜானகிராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தேசிய விண்வெளி தினத்தின் சிறப்புகள், விண்வெளி ஆய்வுத் துறையில் இந்திய அரசு செய்து வரும் சாதனைகள், புதிய திட்டங்கள், விண்வெளி ஆய்வுத் துறையின் தற்போதைய போக்குகள், வேலைவாய்ப்புகள் போன்றவை குறித்து எடுத்துரைத்து பேசினாா். தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அவா் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எஸ்.ராஜேந்திரன், துணை முதல்வா் ஆா்.மீனாட்சி, துறைத் தலைவா்கள் ஜெ.சந்திரசேகா், ஜி.மணிகண்டன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.