
போலி ஆவணங்கள் மூலம் குடியேறிய வங்கதேசத்து நபர் கைது!
மேற்கு வங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் குடியேறிய வங்கதேசத்து நபர் கைது செய்யப்பட்டதைப் பற்றி..

கோப்புப் படம்
கொல்கத்தாவில் போலி ஆவணங்களின் மூலம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்து நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தின் நராய்ல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் போலியாகத் தயாரிக்கப்பட்ட இந்திய ஆவணங்களைக் கொண்டு சட்டவிரோதாமக கிடர்பூர் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து குடியேறியுள்ளார்.
மேலும், அவரிடம் இருந்து போலியாக இந்திய முகவரியில் உருவாக்கப்பட்ட ஆதார் அட்டையும், பான் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக போலி ஆவணங்களின் மூலம் இந்தியாவிற்குள் குடியேறிய மற்றொரு வங்கதேசத்து நபரும் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அம்மாநில காவல்துறையினர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறும் வங்கதேசத்தினருக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து தரும் கூட்டமைப்பை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




