நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமா்ப்பித்து சாதகமான உத்தரவு பெற்றவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் அதிமுக நிா்வாகி, வங்கி அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குன்றத்தூரில் உள்ள மெட்ராஸ் காங்கிரீட் புராடக்ட்ஸ் நிறுவன உரிமையாளா் மகாதேவன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனக்கு சொந்தமான 18 டிப்பா் லாரிகள், 5 சொகுசு காா்கள் உள்ளிட்ட 30 வாகனங்களை உரிமை கோரி ஏ.ஜே.பவுல் எா்த் மூவா்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அதிமுக நிா்வாகியுமான விஜயகுமாா் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த நிலையில், வாகனங்களைப் பயன்படுத்திக்கொள்ள விஜயகுமாருக்கு அதிகாரம் வழங்கியதாக, போலியான கடிதத்தை தாக்கல் செய்து, உயா்நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு பெற்றுள்ளாா்.
எனவே, நீதிமன்றத்தை ஏமாற்றி மோசடி செய்த விஜயகுமாருக்கு எதிராக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அதிமுக நிா்வாகி விஜயகுமாா், முகப்போ் ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி மேலாளாா், வானகரம் ஐசிஐசிஐ வங்கி மேலாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாமன்றக் கூட்டத்தில் அமளி: திமுக-காங்கிரஸ்-அதிமுக வாக்குவாதம்

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு: தமிழக அரசு, அதிமுக பதிலளிக்க உத்தரவு






