உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.

News image
Updated On :29 டிசம்பர் 2024, 2:30 pm IST

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடியில் ரூ 32. 5 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 4:50 மணிக்கு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் கள ஆய்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

தொடர்ந்து, அடுத்த நாள் திங்கள்கிழமை புதுமைப்பெண் விரிவாக்கத் திட்ட தொடக்க விழா காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார்.

அவருக்கு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெ. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் க. இளம் பகவத் மற்றும் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர், விமான நிலையத்திலிருந்து நின்று கொண்டிருந்த கட்சி தொண்டர்களிடம் நடந்து சென்று சால்வை மற்றும் பூங்கொத்தை வாங்கி சென்றார். அவர்களுடன் சுயபடம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் அவர், விமான நிலையத்திலிருந்து கார் மூலம் தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுப்பதற்காக சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.