
விழுப்புரம்: பாமக இளைஞரணித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, தைலாபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பாமகவின் 2025- ஆம் புத்தாண்டு சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் பட்டனூரில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது பாமகவின் இளைஞரணித் தலைவராக தனது மகள் வழிப் பேரன் ப . முகுந்தனை நியமிப்பதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆன நிலையில், அவருக்கு பதவி தருவதற்கு பதிலாக, சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடிய நபருக்கு அப்பதவியை வழங்கலாம் எனத் தெரிவித்து பேசினார்.
இதையும் படிக்க: தென்கொரியா: விமான விபத்து பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு!!
உடனடியாக ராமதாஸ், என்னால் உருவாக்கப்பட்ட கட்சி இது. அவர் இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார் என மீண்டும் பேசினார். இதையடுத்து மேடைடையிலிருந்து அன்புமணி ராமதாஸ் வெளியேறி சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸுக்கும் , அன்புமணி ராமதாஸுக்கும் இடையேயான சமாதான பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கி நடைபெற்றது.
கட்சியின் கெளரவத் தலைவர் கோ. க மணி, நிலையச் செயலர் அன்பழகன், வன்னியர் சங்க செயலர் கார்த்தி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.