ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

கோயிலில் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

கர்நாடக சிலிண்டர் விபத்தில் பலியான ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதைப் பற்றி..

(கோப்புப்படம்)

Published On :29 டிசம்பர் 2024, 5:22 pm IST

ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த ஐயப்ப பக்தர்களில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த டிச.23 அன்று சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.

பின்னர் கர்நாடக அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர்கள் 9 பேரில் நேற்று (டிச.28) இரவு ஒருவர் பலியானதுடன், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், இன்று (டிச.29) காலை மஞ்சுநாத் வாக்மோர் (வயது-22) என்பவர் சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளார். இதனால், அந்த சிலிண்டர் விபத்தில் பலியான ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், படுகாயம் அடைந்தவர்களில் 3 பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்களாக 9 பேரும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு சாய் நகரின் சிவன் கோயிலில் தங்கியிருந்தனர்.

பலியான ஐயப்ப பக்தர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.5 லட்சம் இழப்பீடு அறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.