வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஜூன் காலாண்டில் ஊழியர் எண்ணிக்கையை 3,292 ஆக குறைத்த ஹெச்.சி.எல். டெக்!

ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஜூன் காலாண்டில் தனது ஊழியர் எண்ணிக்கையில் 3,292 பேர் குறைந்துள்ளதாக இன்று அறிவித்தது.

News image

ஹெச்சிஎல் டெக்

Updated On :13 ஜூலை 2026, 10:55 pm IST

புதுதில்லி: ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஜூன் காலாண்டில் தனது ஊழியர் எண்ணிக்கையில் 3,292 பேர் குறைந்துள்ளதாக இன்று அறிவித்தது.

கடந்த காலாண்டிலிருந்த 2,27,181 என்ற எண்ணிக்கையிலிருந்த ஊழியர்களின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 2,23,889 ஆக குறைந்தது.

சமீபத்தில் முடிவடைந்த காலாண்டிற்கான ஊழியர் வெளியேற்ற விகிதம், கடந்த 12 மாதங்களின் அடிப்படையில் 12.7% இருந்தது. இதுவே மார்ச் 2026ல் 12.5 சதவீதமாகவும், ஜூன் 2025 முடிவடைந்த காலாண்டில் 12.8 சதவீதமாகவும் இருந்தது.

மார்ச் காலாண்டில் 2,27,181 ஆக இருந்த ஊழியர் எண்ணிக்கை, ஜூன் 2026 நிலவரப்படி 2,23,889 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் ஊழியர்களின் எண்ணிக்கை 2,23,151 ஆக இருந்தது.

தனி ஒரு நபர் ஊழியருக்கான வருவாய் அதிகரித்து 65,500 டாலராக இருப்பதாக ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான ராம் சுந்தரராஜன் தெரிவித்தார்.

பொதுவாக வணிகம் மந்தமாக இருக்கும் எனக் கருதப்படும் முதல் காலாண்டில், நிறுவனம் 1,056 புதிய பணியாளர்களை பணியில் ஹெச்.சி.எல். டெக் இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

HCL Technologies on Monday reported a drop of 3,292 employees in its workforce tally for the June quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.