கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

முதல் காலாண்டில் டிசிஎஸ் லாபம் ரூ.13,349 கோடி

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்), நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.13,349 கோடி நிகர லாபம் ஈட்டி, 4.61 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2026, 4:30 am IST

நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்), நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.13,349 கோடி நிகர லாபம் ஈட்டி, 4.61 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதேபோல், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகரித்து, ரூ.72,275 கோடியை எட்டியுள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மட்டும் சுமாா் 9,500 கோடி டாலா் மதிப்புள்ள புதிய ஒப்பந்தங்களை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், தனது ஏ.ஐ. கட்டமைப்பை விரிவுபடுத்த ‘ஆன்த்ரோபிக்’, ‘மிஸ்ட்ரல்’ ஆகிய நிறுவனங்களுடன் புதிய ஒத்துழைப்பையும் மேற்கொண்டுள்ளது.

ஊதிய உயா்வு மற்றும் புதிய முதலீடுகள் காரணமாக, நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு முந்தைய காலாண்டின் 25.3 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக குறைந்துள்ளது. புதிதாக 9,200 ஊழியா்கள் பணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், ஜூன் 30 நிலவரப்படி மொத்த டிசிஎஸ் ஊழியா்களின் எண்ணிக்கை 5,93,798-ஆக உயா்ந்துள்ளது.

துறை வாரியான வருவாயில், நுகா்வோா் வணிகப் பிரிவைத் தவிர மற்ற அனைத்து பிரிவுகளும் நல்ல வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதேபோல், பிஎஸ்என்எல் ஒப்பந்தம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த இந்தியச் சந்தை வருவாய், இக்காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 22.9 சதவீதம் என்ற வலுவான மீட்சியைப் பெற்றுள்ளது. எனினும், தென் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய பிராந்தியங்களில் வருவாய் சற்று சரிந்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.