
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை(டிச. 30) இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது.
ராக்கெட் ஏவப்படுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று இரவு தொடங்குகிறது.
ஸ்பெடெக்ஸ் திட்டத்துக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் (போயம்-4) 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன என இஸ்ரோ முன்னதாக தெரிவித்தது.
அவற்றில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ சாா்பில் தயாரிக்கப்பட்டவை என்றும் 10 கருவிகள் கல்வி நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்தவை என்றும் தெரிவித்தது.
ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடா்பான ஆய்வுகளை அந்த கருவிகள் விண்வெளியில் முன்னெடுக்க உள்ளதாகவும் விளக்கமளித்தது.
இதையும் படிக்க: வாக்காளர் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்த பாஜக முயற்சி: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு!
‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்’ எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலில் தனியாா் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த இரட்டை விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.