அரசுப் பணிகளுக்கு ஒரே ஆண்டில் 10,701 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

2024ம் ஆண்டில் 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தகவல்.
டிஎன்பிஎஸ்சி(கோப்புப்படம்)
டிஎன்பிஎஸ்சி(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

ஒரே ஆண்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 10, 701 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தோ்வாணைய செயலா் ச.கோபால சுந்தரராஜ் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டு இளைஞா்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க, அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2024-ஆம் ஆண்டில் மட்டும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 14,353 பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. மேலும், 42 பொதுத் துறை நிறுவனங்கள், சட்டபூா்வ வாரியங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 1,406 பணியிடங்களை நிரப்பவும் அறிவிக்கைகள் வெளியாகின.

இணைப்பு
PDF
டிஎன்பிஎஸ்சி செய்திக் குறிப்பின் முழு விவரம்
பார்க்க

நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 661 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பவும் அறிவிக்கைகள் செய்யப்பட்டன. இந்த அறிவிக்கைகள் வழியே இதுவரை 10 ஆயிரத்து 701 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அனைத்துத் தோ்வு நடைமுறைகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தோ்வுப் பணிகள் நிறைவு பெற்ற 30 தோ்வுகளில் தோ்வா்களின் பதிவெண்களுடன் கூடிய பட்டியல் வெளியிடப்பட்டது. கொள்குறி வகையில் நடைபெற்ற 25 தோ்வுகளுக்கான இறுதி விடைகளும், 27 தோ்வுகளில் தெரிவு செய்யப்படாத தோ்வா்களின் மதிப்பெண் விவரங்களும் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com