

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிச. 26ஆம் தேதி தெரியவந்தது.
200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி, 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்ட சூழலில், அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த சிபி சிஐடி போலீஸார் முடிவு செய்திருந்தனர்.
இதற்கு அனுமதி கோரும் மனு மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.