அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஆண்டுதோறும் ஏழைகாத்தம்மன்- வல்லடிக்கார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டுக்கான இன்று நடைபெற்று வரும் இவ்விழாவினை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. சஜீவனா தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

முதலில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின் முதல் காளையாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது . அதனைத் தொடர்ந்து தேனி,மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகளை ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படுகிறது. வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.

அதேபோல மாடுபிடி வீரர்களிடம் பிடி படாத காளைகளுக்கு அதன் உரிமையாளர்களிடமும் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் இணையதள வழியாக முன்பதிவு செய்த தகுதியானவர்களை தேர்வு செய்து போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையிலான நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com