தேர்தல் ஆணையம்...
தேர்தல் ஆணையம்...

மார்ச் 13, 14-ல் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு?

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் 2-வது வாரத்தில் வெளியாகலாம் எனத் தகவல்கள்...

மக்களவைத் தேர்தல் அறிவிப்பை அனேகமாக வரும் மார்ச் 13 - 14 தேதிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் அறிவிப்பை ஆணையம் வெளியிட்டவுடனேயே, வழக்கம்போல, தேர்தல் நடத்தை நெறிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிடும்.

தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் பற்றி அறிவதற்காக ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையக் குழுவினர் சென்று தலைமைத் தேர்தல் அலுவலர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வரும் வாரங்களில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு – காஷ்மீர் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பு, மார்ச் 10 ஆம் தேதியும் 2014 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்களிக்கத் தகுதியான சுமார் 97 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்கள்.

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com