புது தில்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அவசரகதியில் ஜிஎஸ்டி-ஐ அமல்படுத்தியது மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதிகள் அதிகரித்தது மூலம் வேலையின்மை அதிகரிக்க முக்கியக் காரணங்களால் மோடி அரசு நாட்டின் “வேலையின்மை நெருக்கடியை” அதிகப்படுத்தியுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துவிட்டதாகவும், இந்த பிரச்னைக்கு தீா்வுகாண மோடி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்
நாட்டில் வேலையின்மை குறித்து சிட்டி பேங்க் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து காங்கிரஸ் தொடா்ந்து சுட்டிக் காட்டி வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அவசரகதியில் ஜிஎஸ்டி-ஐ அமல்படுத்தியது, இதனால் சிறு,குறு, நடுத்தர துறையில் ஏற்பட்ட பாதிப்பு, சீனாவில் இருந்து அதிகரித்தது வரும் இறக்குமதி போன்றவற்றால் வேலையின்மை அதிகரித்துள்ளது",என்று ரமேஷ் கூறினார்.
"பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளால், நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது, பட்டதாரி இளைஞர்களில் 42 சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்," என்று அவர் கூறினார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் மட்டுமே நமது இளைஞா்களை வேலையின்மை பிரச்னையில் இருந்து காக்க முடியும். 7 சதவிகித ஜிடிபி வளர்ச்சி கூட நமது இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்காது . தோல்வியடைந்த மோடி பொருளாதார கொள்கையே வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு மூல காரணம்" என்று ரமேஷ் கூறினார்.
"மத்திய அரசில் மட்டும் 10 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன - இது நமது படித்த இளைஞர்களுக்கு வெறும் கேலிக்கூத்தாக இல்லை என்றாலும், நமது அரசாங்கத்தின் செயல்பாட்டில் ஒரு தடையாக உள்ளது" என்று அவர் கூறினார்.
"இந்தியாவில் உள்ள தொழிலாளா்களில் 21 சதவிகிதம் பேர் மட்டுமே சம்பளம் பெறும் வேலையில் உள்ளனர், இது கரோனாவுக்கு முன்பு இருந்ததைவிட 24 சதவிகிதத்தை விட குறைவாக உள்ளது என்று ஆய்வறிக்கை மேற்கோள் காட்டிய ஜெய்ராம் ரமேஷ், கரோனாவுக்கு பின்பு பெரும் பணக்காரா்களின் சொத்துகள் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர், உழைத்துப் பிழைக்கும் மக்களும் பொருளாதாரரீதியாக பின்னோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனா்" என்று ரமேஷ் கூறினார்.
முக்கியமாக கிராமப்புற மக்களின் வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. அதாவது விலைவாசி உயா்வுக்கு ஏற்ப அவா்களால் பொருள்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். அவர்களின் உண்மையான ஊதியம் 1-1 ஆக குறைந்துள்ளது. மோடி ஆண்டுக்கு 5 சதவிகித "கிராமப்புற மக்களை ஏழைகளாக்குகிறார்" என்று குற்றம் சாட்டினார்.
மோடி அரசின் பல திட்டங்கள் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்படுகின்றன. ஆனால், அதற்கேற்ப பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும், சீர்திருத்தத்திற்கான பரிந்துரைகளை மட்டுமே வழங்குகிறது. உதாரணமாக ‘திறன்மிகு இந்தியா’ திட்டத்தில் வேறும் 4.4 சதவீதம் இளைஞா்களுக்கு மட்டும் பெயரளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், முற்றிலும் தோல்வியடைந்ததாகவே ரமேஷ் கூறினார்.
காங்கிரஸின் நியாய பத்ராவில் வாக்குறுதியளிக்கப்பட்ட "ஒரு புதிய திறன் முயற்சி மிகவும் அவசியமானது - பயிற்சிக்கான உரிமை' என்பது காலத்தின் தேவை" என்று ரமேஷ் கூறினார்.
"முத்ரா மற்றும் ஸ்வநிதி போன்ற சிறு வணிகங்களுக்கு வழங்கும் கடன் திட்டங்கள் மிகப்பெரிய தோல்வியையே சந்தித்துள்ளன, மேலும் 'பெரிய அளவிலான மறுசீரமைப்பு' தேவைப்படுகிறது," என்று அவர் கூறினார்.
இளைஞா்கள் குறைந்த ஊதியத்துக்கு பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனா். மக்கள் அன்றாட செலவுகளுக்குக் கூட பணம் ஈட்ட முடியாத நிலை உருவாக்கியுள்ளது.
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 என்ற காங்கிரஸின் உத்தரவாதம் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
கட்டுமானத் துறையில் இந்தியா அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசு பெரிய அளவிலான சமூக வீட்டுத் திட்டத்தைத் தொடங்க வேண்டும், ”என்று அவர் தனது அறிக்கையில் மேலும் கூறினார்.
" பிரதமரும் அவரது பொருளாதார வல்லுநர்களும் வேலையின்மை குறித்த கருத்தை தொடர்ந்து கண்டுகொள்ளப்படாததால் 2014 ஆம் ஆண்டிலிருந்து நாம் பார்த்து வரும் வேலையின்மை, ஒருவேளை இன்னும் அபாயகட்டமான வேலையின்மைக்கு வழிவகுக்கும்" என்று ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!
அஸ்ஸாம் காவல்துறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: மக்கள் பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கேள்வி!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


