ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரெளடி திருவேங்கடம் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரெளடி திருவேங்கடம் (கோப்புப்படம்)
ரெளடி திருவேங்கடம் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரெளடி திருவேங்கடம் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி போலீஸாா் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், 5 நாள்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து அன்று மாலையே 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு இணை ஆணையா் விஜயகுமாா் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து, மாதவரம் பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக குற்றவாளிகள் தெரிவித்ததை அடுத்து, அதனை பறிமுதல் செய்வதற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் திருவேங்கடம் என்ற நபரை இன்று(ஜூலை 14) அதிகாலை காவல் துறையினர் மாதவரம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, முள் புதர்கள் நிறைந்த அந்த பகுதியில் அழைத்துச் சென்றபோது திருவெங்கடம் காவல் துறையினரை தாக்கி விட்டு அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து காவல் துறையினரை தாக்க முயற்சித்துள்ளார்.

ரெளடி திருவேங்கடம் (கோப்புப்படம்)
இளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!

இதனால் தற்காப்புக்காக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் குற்றவாளி திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருவேங்கடம் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

ரெளடி திருவேங்கடத்தின் பின்னணி:

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு முன்பு, ஒரு மாதம் காலம் அவரை நோட்டமிட்டு அவர்கள் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கூட்டாளிகளுக்கு திருவேங்கடம் தகவல் கொடுத்துள்ளார்.

மேலும், இவர் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உள்பட ஐந்து வழக்குகள் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com