
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய, கர்நாடக அரசுகளை கண்டித்து மன்னார்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ரயிலில் ஈடுபட்டனர்.
காவிரி டெல்டா பாசனம் மற்றும் குடிநீருக்கும் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசு, கர்நாடக அரசை தண்ணீர் திறக்க வலியுறுத்த வேண்டும் எனக் கூறி மன்னார்குடியில் சிபிஎம் மற்றும் சிபிஐ விவசாய சங்கங்களின் சார்பில் செவ்வாய்கிழமை மன்னார்குடி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கர்நாடக அணைகளில் 250 டி.எம்.சி. தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு 1 டி.எம்.சி. தண்ணீர் கூட திறக்க மறுத்து இதற்கு ஆதரவாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ள கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்திவிட மத்திய அரசு வலியுறுத்திட வேண்டும் என்றும், தமிழக அரசு அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கங்களை உடனடியாக கூட்டி பேசி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் தம்புசாமி , சிபிஐ விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலர் ஜோசப் தலைமையில் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் முன் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து , மன்னார்குடி ஊரக காவல் நிலைய காவல் துறையினர், மறியலில் ஈடுப்பட்ட 63 பேரை அப்புறப்படுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், 30 நிமிடம் ரயில் தாமதமாக புறப்ட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.