பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து... எதற்காக?
எக்ஸ் சமூக வலைதளத்தில் அதிக அளவிலான பின்தொடர்வோர் எண்ணிக்கை பெற்ற உலக தலைவர்கள் வரிசையில் முன்னணி நபராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.


வாஷிங்டன்: எக்ஸ் சமூக வலைதளத்தில் அதிக அளவிலான பின்தொடர்வோர் எண்ணிக்கை பெற்ற உலக தலைவர்கள் வரிசையில் ஞாயிற்றுக்கிழமை 10 கோடியை பிரதமர் நரேந்திர மோடி கடந்தார். இதையடுத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அதிக அளவிலான பின்தொடர்வோர் எண்ணிக்கை பெற்ற உலக தலைவர்கள் வரிசையில் முன்னணி நபராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இதையடுத்து அவருடை புதிய சாதனைக்காக பலரும் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையி்ல், எக்ஸ் சமூக வலைதள சிஇஓ எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமரை பின்தொடா்வோா் எண்ணிக்கை சுமாா் 3 கோடி அதிகரித்துள்ளதாகவும், அரசின் தலைவா் என்ற அடிப்படையில், ‘எக்ஸ்’ வலைதளத்தில் உலகிலேயே அதிகம் பேரால் பின்தொடரப்படும் தலைவராக பிரதமா் மோடி நீடிக்கிறாா். அமெரிக்க அதிபா் ஜோ பைடன் (3.8 கோடி), துருக்கி அதிபா் எா்டோகன் (2.1 கோடி),துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது (1.12 கோடி)மற்றும் போப் பிரான்சிஸ் (1.85 கோடி) ஆகியோர் பின்தொடரப்படும் இதர தலைவா்களாக உள்ளனா்.
இந்தியாவில் பிற அரசியல் தலைவர்களைவிட மோடி அதிக எண்ணிக்கையிலான பின்பற்றுவோரை கொண்டுள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் 10 கோடி பேரால் பின்தொடரப்படுவதைக் கொண்டாடும் விதமாக தனது ஆதரவாளா்களுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு அடுத்தபடியாக அதிகம் பின்தொடரப்படும் உலக அரசியல் தலைவராக மோடி மாறியுள்ளார்.
இந்த நிலையில், எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் மற்றும் டெஸ்லா சிஇஓ-வான எலான் மஸ்க், அதிகயளவில் பின்தொடர்வோரைக் கொண்ட உலக தலைவரானதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வரிசையில், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு 2.64 கோடி பின்தொடர்வோர்கள் உள்ளனர். தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் ல் (2.75 கோடி),அகிலேஷ்(1.99 கேோாடி), மம்தா பானர்ஜி(74 லட்சம்) ஆகியோர் மோடியை விட பின்தங்கியுள்ளனர்.
உலக தலைவர்களான அமெரிக்க அதிபர் பைடன் (3.81 கோடி பாலோயர்கள்), துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது (1.12 கோடி பாலோயர்கள்) மற்றும் போப் பிரான்சிஸ் (1.85 கோடி) ஆகியோரை விடவும் மோடி முன்னிலையில் உள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அமெரிக்க இசை பிரபலங்கள் டெய்லா் ஸ்விஃப்ட் (9.5 கோடி), லேடி ககா (8.3 கோடி), நடிகை கிம் கா்தாா்ஷியன் (7.5 கோடி), கிரிக்கெட் வீரா் விராட் கோலி (6.4 கோடி), பிரேசில் கால்பந்து வீரா் நெய்மா் (6.3 கோடி), அமெரிக்க கூடைப்பந்து வீரா் லெப்ரான் ஜேம்ஸ் (5.2 கோடி) உள்ளிட்டோரைவிட பிரதமா் மோடியை அதிகம் போ் பின்தொடா்கின்றனா். பிரதமா் மோடியுடன் உலகத் தலைவா்கள் பலரும் எக்ஸ் வலைதளம் வாயிலாக ஆா்வத்துடன் தொடா்புகொள்கின்றனா். இதன் மூலம் அந்த தலைவா்களை பின்தொடா்வோா் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டில் எக்ஸ் வலைதளத்தில் (அப்போது ட்விட்டா்) இணைந்த பிரதமா் நரேந்திர மோடி, இதுவரை யாருடைய கணக்கையும் தடுத்ததில்லை.
எக்ஸ் வலைதளத்தைப் போல் யூ-டியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் பிரதமா் மோடி பிரபலமானவராக திகழ்ந்து வருகிறார்.யூ-டியூபில் 2.5 கோடி பேரும் இன்ஸ்டாகிராமில் 9.1 கோடி பேரும் அவரை பின்தொடா்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...