இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானதா? எலான் மஸ்க் கருத்தால் சர்ச்சை
இன்ஸ்டாகிராம் குறித்து எலான் மஸ்க் கூறியது பற்றி...
இன்ஸ்டாகிராம் | எலான் மஸ்க்
இன்ஸ்டாகிராம் செயலியை பெண்களுக்கானது என எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியிருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சமூக ஊடகத் தளமான எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், மற்றொரு சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமை தன்னுடைய மொபைல் போனில் இருந்து நீக்கி விட்டதாகவும், அந்த ஊடகம் முற்றிலும் பெண்களுக்கானது, இந்தச் செயலியால் எந்தப் பயனும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அந்த எக்ஸ் பயனரின் கருத்தை மேற்குறிப்பிட்டு எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கும், இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானதுதான் என்று மறு பதிவிட்டார்.
எலான் மஸ்க்கின் இந்தப் பதிவானது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பதிவு, பாலினப் பாகுபாட்டைப் பிரதிபலிப்பதாகவும், புண்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த மே மாதத்திலும் இதேபோன்ற ஒரு கருத்தை எலான் மஸ்க் கூறியிருந்தார். இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது. என்னிடம் ஆண்கள் யாரேனும் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் சுயவிவரங்களைப் பகிர்ந்தால், அவர்கள் பாலினம் மாறி விட்டார்களா என்ன? என்றுதான் எனக்குத் தோன்றும் என்று தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் ஆகிய இரு சமூக ஊடகங்களையும் உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும்நிலையில், இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையே நீண்டகாலமாக போட்டியும் நிலவி வருகிறது.
Instagram is for girls
— Elon Musk (@elonmusk) October 1, 2026
Summary
Elon Musk's "Instagram Is For Girls" Reply Sparks Debate Online
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







