
ஸ்டார்லிங்க் இணைய சேவை! எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் உயரிய விருது!
எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

எலான் மஸ்க் - கோப்புப் படம்
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் உயரிய விருது வழங்கப்படும் என அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களை நிர்வாகித்து வருகிறார். இதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் சேவைகள் உலகின் பல்வேறு இடங்களுக்கும் செயற்கைக் கோள் மூலம் இணையத்தள வசதி வழங்குகின்றன.
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷியா தொடுத்துள்ள போரில், அந்நாட்டின் தொலைத் தொடர்புகளுக்கும், ராணுவ நடவடிக்கைகளும் இணையதள வசதி தேவைப்படுகிறது.
ஆனால், அத்தியாவசிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால் போர்காலத்தில், எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் இணையவசதி உக்ரைனின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு ஸ்டார் லிங்க் சேவைகள் வழங்கப்பட்டு வருவதை பாராட்டி எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் “ஆர்டர் ஆஃப் பிரீடம்” எனும் உயரிய விருதை வழங்கவுள்ளதாக, உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியின் அலுவலகம் இன்று (ஆக. 26) அறிவித்துள்ளது.
இருப்பினும், இதுகுறித்து எலான் மஸ்க்கின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், உக்ரைனின் பகுதிகளுக்குள் மட்டுமே ஸ்டார் லிங்க் சேவைகளை உக்ரைன் ராணுவம் பயன்படுத்துவதற்கு எலான் மஸ்க் அனுமதி அளித்துள்ளார்.
இதையடுத்து, ரஷிய பகுதிகளிலும் ஸ்டார் லிங்க் சேவையைத் தங்களின் ராணுவம் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமென உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
President Zelenskyy has announced that Elon Musk will be awarded one of Ukraine's highest honors.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





