பூமி அழியப்போவது உறுதி, எப்போது? சூப்பர் கம்ப்யூட்டர் சொல்லும் அதிர்ச்சித் தகவல்
பூமி அழியப்போவது உறுதி, எப்போது? சூப்பர் கம்ப்யூட்டர் சொல்லும் அதிர்ச்சித் தகவல் பற்றி...

வெப்பக்கோளமாக மாறிய பூமி - nasa
பூமி அழியப்போவது உறுதி, அதனை தவிர்க்க முடியாது, எப்படி அழியும் என்பது உள்ளிட்ட தகவல்களை சூப்பர் கம்ப்யூட்டர் கணித்து வெளியிட்டிருக்கிறது.
மேலும், சூரியன் மேலும் பிரகாசமடையும், பூமியின் பருவகாலங்கள் மாறிவிடும், பூமியில் மெல்ல ஆக்ஸிஜன் குறைந்து மனிதர்கள் மற்றும் பல சிக்கலான உயிரினங்கள் உள்பட, ஆக்சிஜனைச் சார்ந்திருக்கும் உயிரினங்களுக்கு இத்தகைய சூழல்கள் பேரழிவை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் கணித்துள்ளனர்.
பல ஆண்டு காலமாகவே உலகம் அழியப்போவது எப்போது என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது. இது குறித்த பல கணிப்புகளும் வந்துகொண்டுதானிருக்கிறது. ஆனால் அழிந்தபாடில்லை என்று புலம்பும் அளவுக்கு வெய்யிலும் தண்ணீர் பஞ்சமும் மக்களை வாட்டி வதைக்கிறது.
2021-ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் சூப்பர கணினியைப் பயன்படுத்தி, பூமியின் வளிமண்டலம் சிக்கலான உயிர்களை ஆதரிக்க முடியாத அளவுக்கு மிகவும் கடுமையானதாக மாறும் ஒரு காலக்கட்டம் இன்னும் எத்தனை ஆண்டுகளில் வரவிருக்கிறது என்று கணித்தபோதுதான், பூமியில் உயிர்கள் அழியும் காலமும் தெரிய வந்தது.
விஞ்ஞானிகள் கசுமி ஒசாகி, கிறிஸ்டோபர் டி. ரெய்ன்ஹார்ட் ஆகியோர், கடந்த 2021-ல் இயற்கை என்ற இதழில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலம் தோராயமாக இன்னும் 108 கோடி ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும் என்கிறார்கள்.
பூமியின் தற்கால வளிமண்டலம் அதிக ஆக்சிஜன் செறிந்துள்ளது, இருப்பினும், பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் அடிப்படையிலான உயிர்க்குறியீடுகளின் ஆயுள்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்று விஞ்ஞானிகள் எழுதியிருக்கிறார்கள்.
தங்களது ஆய்வு மாதிரியைப் பயன்படுத்தி, இன்றைய வளிமண்டல அளவின் 1சதவிகிதத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் அளவுகளுடன் கூடிய பூமியின் வளிமண்டலத்தின் சராசரி எதிர்கால ஆயுள்காலம் தோராயமாக 108 கோடி முதல் 14 கோடி ஆண்டுகள் என அந்த விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்
அதாவது நாம் தற்போது 2026ஆம் ஆண்டில் இருக்கிறோம். இதனுடன் 108 கோடி ஆண்டுகளை கூட்டினால் 100,20,21,000-ஆம் ஆண்டு வரை இந்த உலகில் உயிர்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்காக 100,20,21,000-ஆம் ஆண்டில் பூமி முழுவதும் உயிர்கள் அழிந்துவிடுமா? என்றால் அதுவும் இல்லை. ஆனால், பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு பெருமளவு குறைந்திருக்கும், உயிர்களுக்கு அபாயம் ஏற்படும் என்பதால், இதுவும் ஒரு தோராயமான கால அளவே என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





