
ஒடிடியில் ஒடிசி எப்போது?
தி ஒடிசி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
ஒடிசி - படம்: எக்ஸ்
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய தி ஒடிசி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய இரண்டு பெரும் புனைவுகள் இலியட், ஒடிசி. இரண்டுமே கிரேக்கப் பேரரசுகளை உள்ளடக்கிய மாய எதார்த்த பாணி கதைகளாக உருவாகின.
இதில், தி ஒடிசியை உலகின் மிகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் அதே பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார்.
இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 23,000 திரையரங்குகளில் ஜூலை 17 ஆம் தேதி வெளியானது. தொழில்நுட்ப ரீதியாக ஆச்சரியப்படுத்தினாலும் திரைக்கதையால் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படம் முழுக்க முழுக்க ஐமேக்ஸ் காமிராவினால் எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மோர்டன், ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரான் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், தி ஒடிசி திரைப்படம் வரும் நவ. 17 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Information regarding the OTT release of the film The Odyssey, directed by Christopher Nolan, has come to light.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






