
ஓடிடியில் வெளியான அருள்நிதியின் அருள்வான்!
அருள்வான் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
அருள்வான் போஸ்டர் - படம்: எக்ஸ்
அருள்நிதியின் அருள்வான் திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று(செப். 4) வெளியாகியுள்ளது.
நடிகர் அருள்நிதி ’அருள்வான்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை கணேஷ் விநாயகன் எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தில், நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலைவாழ் பழங்குடியின சிறுமியின் கல்விப் போராட்டமும், அவருக்கு உதவும் மாவட்ட ஆட்சியர் முத்துவேலின் (அருள்நிதி) முயற்சியையும் மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
90 பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில் உருவான அருள்வான் படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த ஜூலை 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், அருள்வான் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
Summary
Arulnithi's film Arulvaaan has been released on an OTT platform today (Sept. 4).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







