ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் பற்றி முதல்வர் விஜய் அறிவித்திருப்பது....

3 free cylinders per year: When will the Annapoorani Super 6 scheme launch? Chief Minister Vijay's announcement

முதல்வர் விஜய்.

Published On :

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு வரும் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

மேலும் எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனக் குறிப்பட்ட அவர் இத்திட்டத்தினால் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவர் என்று கூறினார்.

3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.4,000 கோடி கூடுதல் செலவாகும் எனவும் நிதி நெருக்கடியான சூழலில் மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தவெக வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகை முதல் முதற்கட்டமாக 3 சிலிண்டர்கள் அதுவும் ரூ.2.5 லட்சம் ஆண்டு வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருபபது குறிப்பிடத்தக்கது்.

Summary

Chief Minister Vijay has announced that as the first phase of the Annapoorani Super Six scheme, 3 free cylinders per year will be provided.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER