‘எல்லாம் விஜய் அண்ணனுக்கு விழுந்த வாக்குகள்’ - மரகதம் குமரவேல் பேட்டி
மதுராந்தகத்தில் விழுந்த வாக்குகள் முதல்வர் விஜய்க்காக விழுந்தவை என்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பேட்டி...
முதல்வர் விஜய்யுடன் மரகதம் குமரவேல்
மதுராந்தகத்தில் விழுந்த வாக்குகள் முதல்வர் விஜய்க்காக விழுந்தவை என்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் என்று தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இந்தத் தொகுதியில், கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று, இன்று (அக்.9) காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாதக சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூ. சுகந்தி உள்ளிட்டோரைப் பின்னுக்குத் தள்ளி தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார். பிற்பகல் 3 மணி நிலவரப்படி மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், 65,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில், வெற்றி முகத்தில் இருக்கும் மரகதம் குமரவேல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அவர் பேசுகையில், “இந்த இடைத்தேர்தலில் விழுந்த வாக்குகள் முழுக்க முழுக்க முதல்வர் அண்ணன் தளபதி விஜய்க்காக விழுந்த வாக்குகள். முதல்வர் விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று விஜய் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்றார்.
Summary
TVK candidate Maragatham Kumaravel has stated that the votes cast in Maduranthakam were cast for Chief Minister Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

