
செய்யறிவால் வேலை பறிபோகுமா? என்விடியா சிஇஓ சொல்லும் ஒரே ஆறுதல்!
செய்யறிவால் வேலை பறிபோகாது, பணி வாய்ப்புகள்தான் மாறும் என என்விடியா சிஇஓ சொல்லும் ஆறுதல் தகவல்.

என்விடியா சிஇஓ - ஏஎன்ஐ
செய்யறிவு எனப்படும் செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் துறையில் கோலோச்சத் தொடங்கியது முதலே பெரு நிறுவனங்களின் பணிநீக்கச் செய்திகள்தான் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில், என்விடியோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியிருக்கும் தகவல் சற்று ஆறுதலை அளிக்கிறது.
என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக ரேடியாலஜி (Radiology) துறை சந்திக்கும் சவால்கள் குறித்து பேசிய விடியோ வைரலாகியிருக்கிறது.
அதில், அவர் முதலில் ரேடியாலஜி துறையே இனி இருக்காது என்று சொல்ல வருவது போல ஆரம்பித்து, பிறகு, ரேடியாலஜி துறையில் இருப்பவர்களுக்கான வேலைகள் அழியாது, மாறாக அவை இன்னும் மேம்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் வேலையையும் எவ்வாறு மாற்றுகிறது என்பதை விளக்க, உதாரணமாக ரேடியாலஜி துறையை எப்படி மாற்றுகிறது என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ள முக்கியக் கருத்துகள் இளம் தலைமுறையினருக்கான முக்கிய கருத்தாக உள்ளது.
மேம்படுத்தப்பட்ட செய்யறிவான ஜிபிடி6 ஆஸ்ட்ரா அறிமுகமானது முதலே, மென்பொறியியல் துறையில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் எனவும் பல வேலைகள் பறிபோகும் எனவும் அபாயம் எழுந்துள்ளது. உண்மைதான், செயற்கை நுண்ணறிவு பல வேலைகளை காலி செய்திருக்கிறதுதான். ஆனால், பல வேலைகளை மாற்றியிருக்கிறது என்பதும் உண்மைதான்.
இது பற்றி ஜென்சன் ஹுவாங் பேசிய விடியோவில், கணினி விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு அறிமுகமானதுமே, முதன் முதலில் கதிரியக்கவியல் எனப்படும் ரேடியாலஜிஸ்டுகளின் பணிதான் பறிபோகும் என்று கணித்திருந்தனர். மேலும், இனி யாரும் ரேடியாலஜியே எடுத்துப் படிக்க வேண்டாம் என்றுகூட நேரடியாகவே கூறப்பட்டது.
காரணம், செய்யறிவு என்பது, மனிதர்களைவிட வேகமாக ஸ்கேன் செய்து புரிந்துகொள்ளும் கம்ப்யூட்டர் விஷன் கொண்டது என்று கூறப்பட்டது.
ஆனால், உண்மையில் ரேடியாலஜிஸ்டுகளின் பணிகள் தற்போதுதான் அதிகரித்துள்ளன. அதாவது, முன்பு மனிதர்கள் பார்த்து அறிந்துகொள்ள முடிந்ததைக் காட்டிலும் தற்போது செய்யறிவின் தொழில்நுட்பமாக கம்ப்யூட்டர் விஷன் மூலம் துல்லியமாகக் கண்டறிகிறோம்.
ஒரு ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்ததும், ரேடியாலஜிஸ்ட் செய்யறிவு தொழில்நுட்ப உதவியோடு, துல்லியமாக நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடிகிறது. முன்பு சில சந்தேகங்களுடன் இரண்டு விதமான சிகிச்சையளித்த நிலையெல்லாம் மாறி, துல்லியமான நோய்த் தாக்குதலைக் கண்டறிந்து உரிய சிகிச்சை கிடைக்கத்தான் உதவியிருக்கிறது என்று விளக்கமாகக் கூறியிருக்கிறார் ஜென்சன் ஹுவாங்.
எனவே, புலி வருகிறது புலி வருகிறது என அச்சம் கொள்ளாமல், செய்யறிவு அனைத்து வேலைகளையும் மாற்றுகிறது என்பதை புரிந்து, செய்யறிவைக் கொண்டு பணியை எளிதாக்குவதற்கு மனிதர்கள் கற்றுத்தேற வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இன்றளவில் உள்ளது.
Summary
Will AI cost us our jobs? one reassuring message from the Nvidia CEO
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







