வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

மனிதனை விஞ்சிவிடுமா ஜிபிடி-6 ஆஸ்ட்ரா? என்னவெல்லாம் செய்யும்?

ஓபன் ஏஐ அறிமுகப்படுத்திய ஜிபிடி-6 ஆஸ்ட்ரா பற்றி...

ஜிபிடி-6 ஆஸ்ட்ரா

ஜிபிடி-6 ஆஸ்ட்ரா

Published On :

ஓபன்ஏஐ (OpenAI) அண்மையில் வெளியிட்ட ஜிபிடி-6 ஆஸ்ட்ராதான் (GPT-6 Astra) செயற்கை நுண்ணறிவு துறையில் தற்போது கோலோச்சத் தொடங்கியிருக்கிறது.

கணினி பயன்பாடு, மென்பொருள் பொறியியல், சைபர் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்முறை பணிகளையும் இனி ஆஸ்ட்ரா மிக எளிதாக கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். முந்தைய ஜிபிடி-5.6 சோல்-ஐ விட பல துறைகளில் அசுர மாற்றத்தைக் கொண்டுள்ளதாம்.

மென்பொருள் துறையினருக்கு ஏன் இத்தனை அச்சம்?

ஒரு சில நாள்களாக மென்பொருள் துறையில் இருப்பவர்களுக்கும், மென்பொருள் படிப்பவர்களுக்கும் ஆபத்து என்பது போல செய்திகள் பரவுகின்றன. இதுவரை வெறும் கேள்வி-பதில் சாட்பாட் ஆக செயல்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவு, இனி கணினியை மனிதனைப் போல பயன்படுத்தி, பல படிநிலைப் பணிகளைத் தானாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டிருக்குமாம். அதாவது மனிதன் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு, மனிதன் இல்லாமல் மனிதன் செய்யும் வேலைகளை எளிதாக செய்து முடித்துவிடுவதோடு, விரைவாக வேலையை முடிக்கும் என்பதும் சேர்க்கப்படுகிறது.

இதனை அறிமுகப்படுத்தியிருக்கும் ஓபன் ஏஐ இதை உலகின் மிகவும் புத்திசாலியான ஒழுங்குடன் வடிவமைக்கப்பட்ட மாடல் என்று அழைக்கிறது. அதாவது, செயற்கை நுண்ணறிவின் அடுத்த யுகத்துக்கான ஆரம்பமாம். அதுதான் செயற்கை பொது நுண்ணறிவு.

இந்த ஜிபிடி-6 ஆஸ்ட்ரா, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத கணித வினாக்களுக்கு தீர்வு கண்டது, மென்பொருள்களை வடிவமைத்து சோதிப்பது, தரவுகளை அலசுவது போன்ற பல்வேறு பணிகளை மனித தலையீடு இன்றி செய்து முடிக்குமாம்.

ஆராய்ச்சி, தரவுகளை அலசி ஆவணங்களை உருவாக்குதல், கூட்டங்களுக்கான பிரசன்டேஷன்களை உருவாக்குதல் போன்ற பணிகளையும் செவ்வனே செய்து முடிக்குமாம். முந்தைய செயற்கை நுண்ணறிவுகளை விட விரைவாக துல்லியமாக பணியாற்றுவதும் இதன் மிகப்பெரிய பலமாகக் கூறப்படுகிறது.

மென்பொறியாளர்கள் பயப்படுவதற்குக் காரணம், சிக்கலான கோடிங், டெர்மினல் பணிகள், பக் கண்டுபிடித்தல் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்டிருப்பதே.

சுருக்கமாக சொல்வதாக இருந்தால் ஆஸ்ட்ரா என்பது இதுவரை பதில் சொல்லும் ஏஐ-யிலிருந்து, சொல்லும் வேலையைச் செய்து முடிக்கும் ஏஐ என்பதாக மாறியிருக்கிறது. அதாவது செய்யறிவு என்பது செயற்கை பொது நுண்ணறிவு என்ற நிலையை அடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனித மூளையை ஆஸ்ட்ரா விஞ்சி விடுமா? என்ற கேள்வி எழுகிறது. பதில் விரைவில் கிடைக்கலாம்.

Summary

Will GPT-6 Astra surpass humans? What can it do?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER