மதுரை: கல்யாணம் செய்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்போது இன்னொருவரை காட்டி அவரை கல்யாணம் செய்து கொள்வீர்களா? என கேட்பது போல 2026 இல் அதிமுகவுடன் கூட்டணியா என கேட்பது என்று கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பல பிரச்னைகள் உள்ள அதிமுகவில் நான் எதையாவது பேசி புது பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை என்று கூறினார்.
நடிகர் சிவாஜி கணேசனின் நினைவுநாளையொட்டி மதுரையில் உள்ள சிவாஜி சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், மாநிலத்தில் திமுக பெரும்பான்மை கட்சி.தேசிய அளவில் காங்கிரஸ் பெரும்பான்மை கட்சி. காங்கிரஸ்-திமுகவிற்கு இடையே கூட்டணி பகிர்வு நல்ல முறையில் உள்ளது. கருணாநிதி கூட மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட போது வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார்.
அமைச்சரவையில் இடம் என்பது எம்எல்ஏ, எம்.பி எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டால் தான் அந்த பிரச்சனை வரும்.
காங்கிரஸ் கட்சி 2026 இல் அமைச்சரவில் இடம் பெற வேண்டும் என பேசுவது குற்றமாகாது. இதையெல்லாம் பேசாமல் எப்படி கட்சியை வளர்க்க முடியும்? அதற்காக கட்டாயமாக அமைச்சரவையில் இடம் பெற்றே ஆக வேண்டும் என்றும் சொல்ல முடியாது, அவ்வாறு பேசுவதையும் தவறு என்றும் சொல்ல முடியாது.
இந்தியா முழுவதும் ஒரே நாடு. மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது விருப்பமாக இருக்கலாம். ஆனால் மாநில மக்களுக்கே 100 சதவீதம் வேலைவாய்ப்பு எனக்கூறுவது தவறு. பிறகு இந்தியா எப்படி ஒற்றுமையான நாடாக இருக்க முடியும். பிற மாநிலங்கள் மற்றும் மொழி பேசுகிற மக்களுக்கு வாய்ப்பு இல்லை என்பது சரியான கருத்தாக இருக்க முடியாது.
அதிமுகவில் ஏற்கனவே பல பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கும் போது நான் எதையாவது சொல்லி ஒரு புது பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை. நான் காங்கிரஸ் கட்சியில், வேறு கூட்டணியில் உள்ள போது அதிமுகவையோ அல்லது சசிகலாவையோ விமர்சித்து பேச விரும்பவில்லை. நானே தேவையென்றால் பேசுவேன்.
நானும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி உருவாக வேண்டும் என்று பேசியவன்தான். நான் தங்கபாலு, இளங்கோவன் என எல்லா தலைவர்களும் சொன்னதைத்தான் தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகையும் பேசுகிறார்.
எனவே திமுகவுக்கும் செல்வப்பெருந்தகைக்கும் காங்கிரஸ்க்கும் திமுகவுக்கும் சண்டை என்பது கிடையாது.
திமுகவோடு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். ஸ்டாலின் தலைமையில் ராகுல் காந்தி தலைமையில் மாபெரும் வெற்றியை இந்த கூட்டணி பெற்றுள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமராக வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின் தான்.
கல்யாணம் செய்து குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்போது இன்னொருவரை காட்டி அவரை கல்யாணம் செய்து கொள்வீர்களா? என கேட்பது போல கல்யாணம் செய்து இணக்கமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணியா என கேட்பது தவறானது.
அதேநேரம் மின் கட்டண உயர்வை மாநில அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடிக்கடி மின் கட்டண உயர்வு என்பது ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மக்களை வலிமைப்படுத்திய பிறகு மத்திய,மாநில அரசுகள் கட்டணத்தை உயர்த்தலாம். ஏழை எளிய மக்களை பாதிக்கும் விதத்தில் மின் கட்டண உயர்வு இருக்கக் கூடாது. ஆகவே மின் கட்டண உயா்வை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK

பிரேம் நசீர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 55
தொகுதி அலசல் - குளச்சல்: கூடுதல் பலத்துடன் காங்கிரஸ்!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு


