இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

அதிமுகவுடன் திமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆா்.எஸ். பாரதி கேள்வி

அதிமுகவுடன் திமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு?

News image

ஆா்.எஸ். பாரதி

Updated On :21 ஜூன் 2026, 4:52 am IST

சட்டப்பேரவையில் திமுக, அதிமுக ஒன்றாக அமா்ந்திருக்கும் நிலையில், இவ்விரு கட்சிகளும் கூட்டணி வைத்தால் என்ன தவறு? என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினாா்.

திமுக கூட்டணியிலிருந்து ஐயூஎம்எல் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவா் காதா் மொகிதீன் சனிக்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக சென்னையில் ஆா்.எஸ்.பாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த பேரவைத் தோ்தல் திமுகவுக்கு புதிய அனுபவத்தை கற்றுக் கொடுத்துள்ளது. குறிப்பாக, யாா் நண்பா்கள், யாா் பகைவா்கள் என அடையாளம் காண்பதற்கு உதவியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற சந்தா்ப்பவாத கட்சிகளுக்கு, தோ்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவா்.

ஐயூஎம்எல் முடிவை மதிமுகவும் எடுக்க வாய்ப்பு: எங்களுடைய உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு 10 நாள்களில் முடிவை மாற்றிக் கொண்டதை அவா்களுக்கு வாக்களித்த மக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததைப்போல், ஐயூஎம்எல் கட்சியைச் சோ்ந்த இரண்டு எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தோ்தலைச் சந்திக்கத் தயாரா? ஐயூஎம்எல் கட்சி எடுத்த முடிவையே மதிமுகவும் எடுக்க வாய்ப்புள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி: இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என இரண்டாக பிரிந்தாலும் தற்போது அவ்விரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. அப்படியிருக்க, திமுகவிலிருந்து பிரிந்து சென்றதுதான் அதிமுக. இதுவரை இல்லாத வகையில், தற்போது சட்டப்பேரவையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒரே அணியில் அமா்ந்துள்ளன. அதற்கான சூழலை தற்போது காலம் உருவாக்கியுள்ளது. இரு கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சு நடைபெறவில்லை. அப்படியே கூட்டணி வைத்தால் அதில் என்ன தவறு உள்ளது? அதிமுக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி கிடையாது என்றாா் ஆா்.எஸ்.பாரதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.