
என் கைதுக்கு அமைச்சர் உதயநிதிதான் காரணம் என்று யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், நீலகிரி போலீஸார் கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக, சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக அழைத்து சென்றனர்.
இதனிடையே, உதகை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புகார் அளித்தன் பேரில் சென்னையிலிருந்து கடந்த 29-ந்தேதி, விசாரனைக்கு அழைத்து சென்ற நிலையில் உதகை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
அவினாசி கிளை சிறையில் இருந்து இன்று சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையில் 17 போலீஸார் அழைத்து வந்தபோது, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திடீரென வயிற்று வலி எனக்கூறி வேனில் மயக்கமடைந்துள்ளார்.
உடனடியாக அவரை மதியம் 12.30 மணியளவில், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பின் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே என் கைதுக்கு அமைச்சர் உதயநிதிதான் காரணம், உதயநிதி உத்தரவின்பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்து வருவதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.