ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல்: ராகுல் காந்தி நம்பிக்கை

ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல் வரப்போகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on
Updated on
1 min read

புதுதில்லி: ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல் வரப்போகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

7-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 3, சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில், நாட்டில் இந்தியா கூட்டணி அரசு அமையப் போகிறது என்பது இதுவரை நிலவி வரும் போக்குகளில் இருந்து தெளிவாகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

இன்று நடைபெற்று வரும் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நாட்டில் இந்தியா கூட்டணி அரசு அமையப் போகிறது என்பது இதுவரை நிலவி வரும் போக்குகளில் இருந்து தெளிவாகிறது.

கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அனைவரும் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காக வாக்களிக்க வந்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

இன்றும் வாக்காளர்கள் பெருந்திரளாக வெளியில் வந்து, ஆணவத்துடன் கொடுங்கோன்மையின் அடையாளமாக மாறியுள்ள பாஜக அரசாங்கத்தின் மீது உங்கள் வாக்குகள் மூலம் 'இறுதிப் போராட்டத்தை நடத்துங்கள்'.

ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல் வரப்போகிறது என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com