மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து!

தேஜகூ வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :4 ஜூன் 2024, 9:37 am

DIN

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வாழ்த்து தெரிவித்ததாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சந்திரபாபு நாயுடுவும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தில் உள்ள சட்டப் பேரவை தொகுதிகள் 175-ல் 158 தொகுதிகளில் தெலுங்கு தேசம் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சி முன்னிலை வகிக்கிறது.

தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியாக இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஒரு இடத்தில் வெற்றி பெற்று அபார வெற்றியை நோக்கி, தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை இருக்கின்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.