விசிகவுக்கு மாநில அந்தஸ்து: திருமாவளவன் மகிழ்ச்சி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்பது எனது 25 ஆண்டு கால கனவு என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிகவுக்கு மாநில அந்தஸ்து: திருமாவளவன் மகிழ்ச்சி!
Published on
Updated on
2 min read

சிதம்பரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்பது எனது 25 ஆண்டு கால கனவு என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு அடுத்தபடியாக இன்றைக்கு மாநில அளவிலான ஒரு அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறுகிற பரிணாமத்தை விடுதலை சிறுத்தை கட்சி அடைந்திருக்கிறது.

பாஜக கட்சிக்கு சாதகமான ஊடகங்களை வைத்து கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொதுமக்களிடம் திணித்தார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்த வெறுப்பு அரசியலை வீழ்த்தி இந்தியா கூட்டணிக்கு தங்களது பேராதரவை மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.

இந்தியா கூட்டணி தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும்கூட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது பாஜக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது.

உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி முடித்து பிரம்மாண்டமான விழாவை நடத்தி மாபெரும் மாயையை மக்களிடம் உருவாக்கினார்.

கடைசி கட்ட வாக்குப் பதிவின்போது கன்னியாகுமரிக்கு வந்து விவேகானந்தா பாறையில் அமர்ந்து 48 மணி நேரம் தியானம் இருக்கிறேன் என்று ஒரு நாடகத்தை நடத்தினார் . இவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி உள்ளனர் மக்கள்.

இந்த நாடக அரசியல் ஒருபோதும் ஏற்க மாட்டோம். ராமரின் பெயரால் நடத்துகின்ற அரசியல் இந்து சமூகத்தினருக்கு எந்த வகையிலும் பயனளிக்க கூடியது அல்ல என்று பெரும்பாலான இந்துக்களே பாரதி ஜனதா கட்சியை புறந்தள்ளி உள்ளனர்.

பத்தாண்டு கால இருண்ட ஆட்சியை மோடி தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை உறுதியாக தூக்கி எறிய முடியும். அவர்களது அரசியலுக்கு சமாதி கட்ட முடியும்.

விசிகவுக்கு மாநில அந்தஸ்து: திருமாவளவன் மகிழ்ச்சி!
நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து!

ஆகவே, இந்த தருணத்தில் ஜனநாயக சக்திகளாக கருதுகிற ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும். ஆதரவு நல்க வேண்டும்.

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக வெளிப்படையாக வேண்டுகோள் விடுகிறோம். சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித் சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம்.

இந்த வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்கள், தொண்டர்கள், தோழமைக் கட்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிற வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு அடுத்தபடியாக இன்றைக்கு மாநில அளவிலான ஒரு அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறுகிற பரிணாமத்தை விடுதலை சிறுத்தை கட்சி அடைந்திருக்கிறது.

ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற பாமக, தேமுதிக, தமாக போன்ற கட்சிகள் அங்கீகாரத்தை இழந்துள்ள நிலையில் இன்றைக்கு தென்னிந்தியாவிலே மாநில கட்சியாக அம்பேத்கர் கொள்கைகளை பேசுகிற ஒரு இயக்கமாக அங்கீகாரத்தை பெற்று இருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற இருக்கிறோம் என்பதை விடுதலை சிறுத்தை கட்சியின் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றார் தொல்.திருமாவளவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com