ராமோஜி ராவ் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ராமோஜி ராவ் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவ் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on

ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவ் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஊடகம்,இதழியல், திரைப்படத் துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

ராமோஜி ராவ் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பாஜக உடன் இனி கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி

இத்துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com