ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தென் கொரியாவில் நிலநடுக்கம்

தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் 8 புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
earthquake
Updated On :12 ஜூன் 2024, 5:57 am

DIN

சியோல்: தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் 8 புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 அலகுகளாகப் பதிவானதாக தென் கொரியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் தென்மேற்கு மாவட்டமான புவான் அருகே புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 அலகுகளாகப் பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 8 கிலோமீட்டர்கள் (5 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள், உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

வடக்கு ஜியோல்லா மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்திருப்பார்கள் என்றும், நிலநடுக்கத்தினால் வீட்டின் ஜன்னல்களில் உடைப்பு மற்றும் பொருள்கள் கீழே விழும் அளவுக்கு வலுவாக இருந்திருக்கும் என்று தென் கொரியாவின் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஜியோல்லா மாகாண தீயணைப்புத் துறையின் அதிகாரி ஜோ ஹே-ஜின், நடுக்கத்தை உணர்ந்த குடியிருப்பாளர்களிடமிருந்து 80-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வரப்பட்டதாக கூறினார்.

மேலும் புவானில் உள்ள ஒரு வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும்,அலமாரிகளில் இருந்து பொருட்கள் கீழே விழுந்து சேதமடைந்துள்ளது மற்றும் அருகில் உள்ள நகரமான ஜூடியோக்கில் ஒரு வீட்டில் ஜன்னல் உடைந்துள்ளது என்றும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் இதுவரை சிறியளிலே நிகழ்ந்திருப்பதாக வரும் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

இந்த நிலநடுக்கமானது 2024 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும், ஆனால் புதன்கிழமை காலை வரை பெரிய சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தால் நாட்டின் அணுமின் நிலையங்கள் எதிலும் பாதுகாப்பு பாதிக்கப்படவில்லை என்றும், அவசரகால ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு எந்த அசாதாரணத்தையும் கண்டறியவில்லை என்று தென் கொரியாவின் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.