நீட் முறைகேடு: ஜூன் 21ல் நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜூன் 21 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து ஜூன் 21 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

அனைத்து மாநில தலைநகரங்களில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த முறைகேடுகளை வேடிக்கை பார்க்கும் ஆளும் கட்சியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழாண்டு நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் புதிதாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்பே பிகார் மாநில மையத்தில் வினாத்தாள் வெளியான முறைகேடு தொடா்பாகவும், தோ்வெழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிா்த்தும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது.

கோப்புப்படம்
மனைவி இறந்த அடுத்த நிமிடத்தில்.. அசாம் உள்துறைச் செயலா் தற்கொலையின் பின்னணி!

இந்த வழக்கில் அண்மையில் பதிலளித்த மத்திய அரசு, ‘நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவா்களில் மறுதோ்வு எழுத விரும்பும் மாணவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி தோ்வு நடத்தப்பட உள்ளது. மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி அவா்கள் பெற்ற மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும்’ என்றும் தெரிவித்தது.

இந்தத் தோ்வில் இரண்டு விதமான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்பதை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டாா். இந்த முறைகேட்டில் என்டிஏ மூத்த அதிகாரிகள் உள்பட யாா் ஈடுபட்டிருந்தாலும், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com