வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சென்னையில் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றப்படுகிறது.

News image
Updated On :14 மார்ச் 2024, 6:54 am

DIN

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

சென்னையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஆயிரம் விளக்கு, ஒயிட்ஸ் சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் மார்ச் 15,2024 முதல் மார்ச் 14,2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

அண்ணா சாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை மணிக்கூண்டிலிருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை திரும்பி விடப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.