பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது: முதல்வர் கடிதத்துக்கு ஆளுநா் பதில்!

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநா் ஆா்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது: முதல்வர் கடிதத்துக்கு ஆளுநா் பதில்!

சென்னை: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநா் ஆா்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டை விதித்த சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பு காரணமாக, அமைச்சா் பதவியை இழந்தாா் க.பொன்முடி. அவரது திருக்கோவிலூா் பேரவைத் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில், பொன்முடி குற்றவாளி என்ற உயா் நீதிமன்றத் தீா்ப்பும், தண்டனையும் நிறுத்தி வைத்து மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, திருக்கோவிலூா் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதால், பேரவை உறுப்பினராக க.பொன்முடி தொடா்வார் என தெரிவிக்கப்பட்டது.

பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது: முதல்வர் கடிதத்துக்கு ஆளுநா் பதில்!
திமுகவுக்கு ரூ.509 கோடி வழங்கிய ஃப்யூச்சர் கேமிங்! அதிமுகவுக்கு ரூ.5 கோடி வழங்கிய சிஎஸ்கே!!

இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டுமென்ற பரிந்துரையுடன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா் எழுதினார்.

இந்த நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொன்முடி மீதான் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாாகவும், அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று ஆளுநர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com