கோப்புப்படம்
கோப்புப்படம்

மார்ச் 26-ல் ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

ஈரோடு மாவட்டத்துக்கு மார்ச் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்துக்கு மார்ச் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறும் என்றும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

கோப்புப்படம்
கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். 

இதையொட்டி, ஈரோடு மாவட்டத்துக்கு மார்ச் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com