வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல்  மிதமான மழை பெய்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. தொடா்ந்து, இந்தாண்டு முதன்முதலாக மாா்ச் 14-ஆம் தேதி 100 டிகிரியை கடந்து 101.5 டிகிரியாக பதிவாகியிருந்தது.

வேலூரில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக வெயில் 105 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்து வந்தது. கடந்த மே 1 - ம் தேதி 111 டிகிரி வெயில் பதிவாகி உச்சத்தை தொட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 7) செவ்வாய்க்கிழமை 105 டிகிரி வெயில் பதிவானது. இதனால், காலை 11 மணிக்கு மேல் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைந்து காணப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல்  மிதமான மழை பெய்து வருகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் திடீரென மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

அதிகாலை முதல் காலை 9 மணி வரை 5 மணி நேரங்களுக்கு மேலாக காட்பாடி, வேலூர் புதிய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி, விருபாட்சிபுரம், அடுக்கம்பாறை, பள்ளிக்கொண்டா, மேல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது.

வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வந்த நிலையில், வெப்ப உஷ்ணம் குறைந்து தற்போது குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூரில் மாவட்டத்தில் 111 டிகிரி வெயிலுக்காக குடை பிடித்தவர்கள் புதன்கிழமை பெய்த மழைக்காக குடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதற்காக வேலூர் மாவட்ட மக்கள் வருண பகவானுக்கு நன்றி கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com