ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

திருப்பத்தூர் மாவட்டம், அரங்கல்துருகத்தில் உள்ள கோழிப்பணையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5000 கோழிகள் எரிந்து நாசமானது.
அரங்கல்துருகத்தில் உள்ள கோழிப்பணை தீ விபத்து எரிந்து நாசமான 5000-க்கும் மேற்பட்ட கோழிகள்.
அரங்கல்துருகத்தில் உள்ள கோழிப்பணை தீ விபத்து எரிந்து நாசமான 5000-க்கும் மேற்பட்ட கோழிகள்.

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், அரங்கல்துருகத்தில் உள்ள கோழிப்பணையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5000 கோழிகள் எரிந்து நாசமானது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் பெரியதம்பி என்பவரின் மகன் துரைமுருகன் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழிப்பண்ணை அமைந்துள்ள பகுதியில் புதன்கிழமை காலை மின்கசிவு ஏற்பட்டுள்ளது.மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீப்பொறி கோழிப்பண்ணை மீது விழுந்து தீப்பிடித்தது. தீ தொடர்ந்து கோழிப்பண்ணை முழுவதும் பரவியது.

இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கொழுந்து விட்டு எரியும் கோழிப்பண்ணை
மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கொழுந்து விட்டு எரியும் கோழிப்பண்ணை
அரங்கல்துருகத்தில் உள்ள கோழிப்பணை தீ விபத்து எரிந்து நாசமான 5000-க்கும் மேற்பட்ட கோழிகள்.
அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும்,

தீ கோழிப்பண்ணை முழுவதும் பரவி எரிந்து நாசமானது. சுமாா் 1 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்தில் பண்ணையில் பாதுகாக்கப்பட்ட சுமார் 5000 கோழிகள் எரிந்து உயிரிழந்ததுடன், தளவாடப் பொருள்களும் எரிந்து நாசமாகின. தீ விபத்தால் சுமார் ரூ.10 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உமர்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com