ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் சுரங்கத்தினுள் சிக்கினர். சிக்கியவர்களில் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
மீட்கப்பட்ட 14 பேர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும், ஒருவர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுவதால் பரிசோதனைக்காக கம்பெனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நீம் கா தானா மாவட்ட ஆட்சியர் ஷரத் மெஹ்ரா தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்பட 15 பேர் ஆய்வுக்காக செவ்வாய்க்கிழமை இரவு சுரங்கத்துக்குள் சென்றபோது விபத்தில் சிக்கினர்.
பணியாளர்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் லிப்ட் ஒன்று கயிறு அறுந்து கீழே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா வெளியிட்டுள்ள ’எக்ஸ்’ தளப் பதிவில், 'கெத்ரி, ஜுன்ஜுனுவில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் லிப்ட் கயிறு அறுந்ததால் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான உதவி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன"எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோபி அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு

ஆந்திரத்தில் கோர விபத்து: லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் பலி!

சாலை விபத்தில் சிக்கிய திருப்பூர் இளைஞர் உடல் உறுப்புகள் தானம்! 3 பேருக்கு மறுவாழ்வு

கால்வாயில் சிக்கிய மான் மீட்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


