வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடி அருகே முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளான தனியார் தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்கள் பயணம் செய்த பேருந்து.
வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடி அருகே முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளான தனியார் தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்கள் பயணம் செய்த பேருந்து.

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 18 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து அமைச்சர் ஆர்.காந்தி, ஆட்சியர் ச.வளர்மதி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடி அருகே வேலூரில் இருந்து சுங்குவார்சத்திரம் தனியார் செல்லிடைப் பேசி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயணம் செய்த பேருந்து முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து அமைச்சர் ஆர்.காந்தி மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அமைச்சர் ஆர்.காந்தி மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடி அருகே முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளான தனியார் தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்கள் பயணம் செய்த பேருந்து.
செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு முதலுதவி சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.

இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு ஓட்டுநரின் முக்கியக் கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com