சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

News image
Updated On :19 மே 2024, 7:06 am

DIN

தோனியின் 110 மீட்டர் சிக்சர் தான் ஆர்சிபி வெற்றியை எளிதாக்கியது என்று அந்த அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, தோனி 110 மீட்டர் தூரத்தில் மைதானத்திற்கு வெளியே அடித்த அந்த சிக்ஸர்தான் நேற்றைய போட்டியில் சிறப்பான தருணம். அதனால், எங்களுக்கு புதிய பந்து கிடைத்தது. அது எங்களுக்கு உதவியது என்றார்.

பரபரப்பான த்ரில் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸை 27 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 68-ஆவது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

வாழ்வா-சாவா என்ற நிலையில் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகுந்த முக்கியமானதாக அமைந்தது. சென்னை அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவா்களுக்குள்ளே வென்றால் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை இருந்தது.

டாஸ் வென்ற சென்னை பௌலிங்கை தோ்வு செய்ய பெங்களூரு அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 218/5 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் சென்னை தரப்பில் சா்துல் தாகுா் 2-61 விக்கெட்டுகளை சாய்த்தாா். 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவா்களில் 191/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

யஷ் தயாள் வீசிய 20ஆவது ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய தோனி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. பௌலிங்கில் பெங்களூரு தரப்பில் யாஷ் தயால் 2-42 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் சென்னை அதிா்ச்சியுடன் வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.