தில்லியில் வெப்பம் அதிகரிப்பு: 4 நாள்களுக்கு வட மாநிலங்கள் முழுவதும் ‘சிவப்பு’ எச்சரிக்கை
அடுத்த 4 நாள்களுக்கு வட மாநிலங்கள் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.


புது தில்லி: தில்லியில் தொடா்ந்து வெப்பநிலை அதிகரித்து வெப்பத்தில் தத்தளித்து வரும் நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு வட மாநிலங்கள் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா-சண்டிகர்-தில்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை விடுத்துள்ளது.
தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (மே 22) குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது, மேலும் கடந்த 2-3 நாட்களாக அந்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் வாரியான முன்னறிவிப்பைப் பொறுத்தவரை, அடுத்த ஐந்து நாட்களுக்கு ராஜஸ்தானுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் அதிகபட்ச வெப்பநிலை ஓரளவு குறைந்துள்ளது, ஆனால் அவை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும்.
இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஏற்கனவே 'சுவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மத்தியப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது."
இருப்பினும், வரும் 2 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் 2 செமீ கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
தில்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதால், மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை செல்ல வேண்டாம் என சுகாதார அலுவலர்கள கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவத் துறை பேராசிரியர் மருத்துவர் நீரஜ் நிஷ்சல் கூறுகையில், அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் சொறி, வெப்ப சோர்வு மற்றும் நீரிழப்பு முதல் வெப்ப பக்கவாதம் வரை இருக்கலாம்.
வெப்ப அலை நிலைமைகள் உடலியல் அழுத்தத்தையும் விளைவிக்கலாம், இது பெரும்பாலும் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடும்.
மக்கள் வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்வதற்கும், கடுமையான நோய்களைத் தடுப்பதற்கு முடிந்தவரை தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தேவை இருப்பின், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்ல வேண்டும். குறிப்பாக மதியம் மற்றும் 3 மணி வரை; தாகம் இல்லாவிட்டாலும், போதுமான அளவுக்கு தண்ணீரை,பழ ரசங்கள், நீர் மோர் போன்றவற்றை முடிந்தவரை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்; மற்றும் வெளிர் நிற, தளர்வான மற்றும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...