
தமிழகத்தில் கோடை மழை இன்று(மே 26) காலை வரை இயல்பை விட 28 % கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாத தொடக்கம் முதல் மே மாத முதல் வாரம் வரை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகி வந்தது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று(மே 25 ) பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் சில பகுதிகளில் பெய்த பருவம் தவறிய கோடை மழையால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த ஒரு வாரமாக மீன்பிடித் தொழில் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.