அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தில்லியில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகக்குளிரான ஜனவரி காலைப்பொழுது பதிவு

தில்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் செவ்வாய்க்கிழமை மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது, குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததுது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

தில்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் செவ்வாய்க்கிழமை மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது, குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததுது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஜனவரி 16, 2023 அன்று தலைநகரில் குறைந்தபட்சம் 1.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியதாக வானிலைத் துறை தெரிவித்துள்ளது.

நகரின் முதன்மை வானிலை ஆய்வகமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.4 டிகிரி செல்சியஸ் குறைவாக பதிவாகியது என்று தரவு காட்டுகிறது.

பாலம் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் குறைவாகவும், லோதி சாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் குறைவாகவும் பதிவாகியது.

ரிட்ஜில் குறைந்தபட்சம் 4.4 டிகிரி செல்சியஸ், அயாநகரில் குறைந்தபட்சம் 3.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.

குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.5 முதல் 6.4 டிகிரி வரை குறையும் போது குளிா் அலை நிலைமைகள் அறிவிக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

புதன்கிழமையும் தில்லியில் குளிா் அலை நிலைமைகள் நீடிக்கும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தில்லியின் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற வகைக்கு மோசமடைந்தது, காற்றின் தரக் குறியீடு 337 புள்ளிகளாகக் பதிவாகியது.

29 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் மிகவும் மோசம் பிரிவிலும், ஒன்று கடுமை பிரிவிலும், ஒன்பது மோசம் பிரிவிலும் காற்றின் தரத்தைப் பதிவு செய்தன.

ஆனந்த் விஹாரில் காற்றின் தரம் 411 புள்ளிகளாக கடுமைய பிரிவில் பதிவாகியது.

பூஜ்ஜியத்திற்கும் 50 க்கும் இடையிலான புள்ளிகள் நல்லது என்றும், 51 முதல் 100 வரை திருப்திகரமானது என்றும், 101 முதல் 200 வரை மிதமானது என்றும், 201 முதல் 300 வரை மோசம் என்றும், 301 முதல் 400 வரை மிகவும் மோசமானது என்றும், 401 முதல் 500 வரை கடுமையானது என்றும் கருதப்படுகிறது.