‘ரீமெல்’ புயல்: பிரதமர் மோடி ஆலோசனை

‘ரீமெல்’புயல் பாதிப்பு மற்றும் தயார்நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ‘ரீமெல்’புயல் பாதிப்பு மற்றும் தயார்நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
‘ரீமெல்’புயல் பாதிப்பு மற்றும் தயார்நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புது தில்லி: வங்கதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடக்கும் ‘ரீமெல்’புயல் பாதிப்பு மற்றும் தயார்நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு புயலாக வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேப்புப்பாரா என்ற பகுதியிலிருந்து சுமாா் 360 கி.மீ. தெற்கு-தென்மேற்கேயும், மேற்கு வங்கம்- சாகா் தீவிலிருந்து 350 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டிருந்தது.

இந்த புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகா்ந்து வருகிறது. இது ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேசத்தின் கேப்புப்பாரா- மேற்கு வங்கத்தின் சாகா் தீவு இடையே கரையைக் கடக்கக்கூடும். அப்போது தரைக்காற்று மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

 ‘ரீமெல்’புயல் பாதிப்பு மற்றும் தயார்நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பை மாற்றுவார்கள்: இந்தியா கூட்டணியினர் மீது மோடி தாக்கு

புயலை முன்னிட்டு மேற்குவங்கத்தின் வடக்கும் மற்றும் 24 பர்கானஸ் பகுதிகளுக்கு திங்கள்கிழமை(மே 27) வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடுமையான புயல் காரணமாக மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள் மற்றும் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ‘ரீமெல்’ புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலைமை மற்றும் தயார்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா, அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் எம் மொஹபத்ரா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொல்கத்தாவில் தற்போது பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவையை சேவையை நிறுத்தியுள்ளனா்.

தென்கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் சுந்தரவனக் காடு மற்றும் சாகர் தீவு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து 1.10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வலுப்படுத்த, மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை(என்.டி.ஆர்.எஃப்) ஆகியவற்றிலிருந்து தலா 16 குழுக்கள் கடலோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com